கலாசாரத்துறை அமைச்சகம்
இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் 38-வது நிறுவன தினம் மூன்று நாள் கலாச்சார நிகழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது
Posted On:
17 MAR 2025 2:04PM by PIB Chennai
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் 38-வது நிறுவன தினம் 2025 மார்ச் 17, 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலைகள் மைய வளாகத்தில் உள்ள சாம்வெட் அரங்கத்தில் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. மூன்று நாள் நடைபறும் இந்த நிகழ்ச்சியில் நாட்டின் கலை, கலாச்சார மரபுகளின் செழுமையை பிரதிபலிக்கும் புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறங்காவலருமான பத்ம விபூஷண் டாக்டர் சோனல் மான்சிங், இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் தலைவர் பத்ம பூஷண் திரு ராம் பகதூர் ராய் மற்றும் இந்த மையத்தின் , அறங்காவலர், பத்ம விபூஷண் டாக்டர் பத்மா சுப்ரமணியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் அறங்காவலர் பத்மஸ்ரீ டாக்டர் தயா பிரகாஷ் சின்ஹா, கல்வியாளரும், புகழ்பெற்ற இசையியலாளரும், இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறங்காவலருமான பத்மஸ்ரீ டாக்டர் பாரத் குப்த், இந்த மையத்தின் உறுப்பினர், செயலாளருமான டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர்.
இன்று மாலை 6:00 மணிக்கு, இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் மற்றும் கலாச்சார ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து ஹவேலி சங்கீதம் குறித்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை புகழ்பெற்ற இசையியலாளரும், ஹவேலி சங்கீத நிபுணருமான ஆச்சார்யா திரு ரஞ்சோட்லால்ஜி கோஸ்வாமி நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில், அதன் வரலாற்று முக்கியத்துவம், பக்தி, இந்திய பாரம்பரிய இசையின் தாக்கம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111739
***
TS/SV/RJ/KR
(Release ID: 2111780)
Visitor Counter : 20