ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
மருந்து உற்பத்தி – மருந்து தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஊக்குவிப்புத் திட்டம் குறித்த தொழில்துறை கலந்துரையாடல் மும்பையில் நடைபெற்றது
Posted On:
13 MAR 2025 4:50PM by PIB Chennai
இந்திய அரசின் மருந்தியல் துறை, மும்பையில் மருந்து உற்பத்தி – மருந்து தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஊக்குவிப்புத் திட்டம் (பி.ஆர்.ஐ.பி)குறித்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) மற்றும் தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.பி.ஆர்) ஆகியவற்றைச் சேர்ந்த தொழில்துறை தலைவர்கள், சங்கங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தொழில்துறை-கல்வி இணைப்புகளை வலுப்படுத்துதல், ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்கான அரசின் முன்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் மருந்து மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்துறைகளில் புதுமையான தீர்வுகளை வணிகமயமாக்குதல் குறித்த விவாதங்களில் ஈடுபட இந்த நிகழ்வு ஒரு தளமாக செயல்பட்டது .
இந்திய மருந்து சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஷர்வில் படேல், தொழில்துறை சார்ந்த கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம், ஒழுங்குமுறை ஆதரவின் தேவை மற்றும் வளர்ந்து வரும் மருந்து தொழில்நுட்பங்களில் மேம்பட்ட முதலீடுகள் ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் பி.ஆர்.ஐ.பி திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் இந்திய அரசின் முயற்சிகளைப் பாராட்டினார்.
இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் அமைப்பின் தலைமை இயக்குநர் திரு அனில் மத்தாய், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தொழில்துறையின் பங்களிப்பை மேலும் ஊக்குவிக்க உகந்த கொள்கைச் சூழலின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111230
***
RB/DL
(Release ID: 2111351)