மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
வெண்மைப் புரட்சி 2.0
Posted On:
12 MAR 2025 6:23PM by PIB Chennai
வெண்மைப் புரட்சி 2.0, கூட்டுறவு அமைச்சகத்தால் 19.09.2024 அன்று தொடங்கப்பட்டது.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, பால் உற்பத்தி மற்றும் மாடுகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக உள்நாட்டு இனங்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மற்றும் மாடுகளின் எண்ணிக்கையின் மரபணு மேம்பாட்டிற்காக தேசிய கோகுல் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இது தவிர, பால் கொள்முதல் மற்றும் பால் பதப்படுத்தும் உள்கட்டமைப்பை உருவாக்குதல் / வலுப்படுத்துதல் முயற்சிகளுக்கு உறுதுணையாக கீழ்க்கண்ட பால்வள மேம்பாட்டுத் திட்டங்களை மாவட்ட பால் மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது:
தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம்
பால்பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பால் கூட்டுறவுகள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்தல்
கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி
இத்திட்டங்கள், நாடு முழுவதும் பால் கூட்டுறவுச் சங்கங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்தவும், 2028-29 ஆம் ஆண்டிற்குள் கூட்டுறவுத் துறையின் பால் கொள்முதலை நாளொன்றுக்கு 1,007 லட்சம் கிலோவாக உயர்த்தும் நோக்கத்தை அடையவும் உதவுகின்றன. இன்றைய தேதியில், நாடு முழுவதும் 2.35 லட்சம் பால் கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன / வலுப்படுத்தப்பட்டுள்ளன. 2023-24 ஆம் ஆண்டில் பால் உற்பத்தி 239.30 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது, இது கடந்த 10 ஆண்டுகளில் 63.56% ஆகும்.
2025 மார்ச் 12 அன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110942
***
RB/ DL
(Release ID: 2111065)
Visitor Counter : 22