ஜல்சக்தி அமைச்சகம்
கங்கை பாதுகாப்பு குறித்த அதிகாரமளிக்கப்பட்ட பணிக்குழுவின் 14-வது கூட்டத்திற்கு மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு சி ஆர் பாட்டில் தலைமை தாங்கினார்
Posted On:
12 MAR 2025 1:56PM by PIB Chennai
கங்கை பாதுகாப்பு குறித்த அதிகாரமளிக்கப்பட்ட பணிக்குழுவின் 14-வது கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு சி ஆர் பாட்டில், ஒருங்கிணைந்த மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறை மூலம் கங்கை நதியை தூய்மையாகவும், மிகவும் பயன்பாடு உடையதாகவும் மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.
பத்து மாநிலங்களில் மொத்தம் ரூ. 40,121 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் நமாமி கங்கை இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் 492 திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். இவற்றில் ரூ. 19,478 கோடி மதிப்பிலான 307 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
கங்கை நதியில் சுத்தகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு 4 ஆயிரத்து 543 கிலோ மீட்டர் தூர கழிவுநீர் வடிகால் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது குறித்தும், இதன்மூலம் தினந்தோறும் 3,346 மெகா லிட்டர் கழிவுநீர் சுத்தகரிக்கப்படுவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைத்தல் துறை செயலாளர் தேபஸ்ரீ முகர்ஜி, குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை செயலாளர் திரு அசோக் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110706
***
TS/SMB/RJ/KR/DL
(Release ID: 2110970)