உள்துறை அமைச்சகம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்திய நீதி சட்டத்தின் கீழ் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளன
Posted On:
11 MAR 2025 5:55PM by PIB Chennai
இந்திய நீதி சட்டம்- 2023-ல்(பி.என்.எஸ்.) முதல் முறையாக, பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஒரு அத்தியாயத்தின் கீழ் அவை தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வகுக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி செய்தால், குற்றவாளியின் எஞ்சிய வாழ்க்கை முழுவதும் அல்லது மரணம் வரை ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களில் பெண் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விதிகள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
மனித கடத்தல் குற்றத்தை தடுப்பதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது. பிஎன்எஸ் - 2023 இன் பிரிவு 143, மனித கடத்தல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைக்கான ஏற்பாடுகளை வழங்குகிறது. குழந்தை கடத்தல் சம்பந்தப்பட்ட குற்றமாக இருந்தால், அதற்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேலும் இது ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் வரை நீட்டிக்கப்படலாம்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.
***
TS/PKV/DL
(Release ID: 2110469)