சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: இந்திய சைகை மொழி
Posted On:
11 MAR 2025 12:57PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளின் மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவை அரசு முதன்மையாக நம்பியுள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் 2.68 கோடி பேர் உடல் குறைபாடுகள் உடையவர்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 19% பேர் செவித்திறன் குறைபாடு உடையவர்கள். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016 இந்திய சைகை மொழியின் அங்கீகாரம், பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றிற்கு போதுமான ஏற்பாடுகளை வழங்குகிறது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016 மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆகியவற்றின் படி, கல்வி அமைப்பில் இந்திய சைகை மொழியை இணைக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. புதுதில்லியில் உள்ள இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் இதற்கான முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது:
என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களை இந்திய சைகை மொழியாக மாற்றுதல், சைகை மொழியை ஒரு மொழிப் பாடமாக மாற்றுதல், இந்திய சைகை மொழி அகராதியை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
மாற்றுத்திறனாளிகள் மத்தியில் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக, மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாட்டுத் துறை, மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாட்டுக்கான தேசிய செயல் திட்டத்தை (NAP-SDP) செயல்படுத்தி வருகிறது.
இந்தத் தகவலை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி.எல். வர்மா, மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு
***
(Release ID: 2110150)
TS/PKV/RR/KR
(Release ID: 2110258)
Visitor Counter : 18