வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இயற்கை பொருட்களின் கண்காட்சி வெஸ்ட் 2025-ல் இந்தியாவில் இயற்கை வேளாண்மை சிறப்பை அபெடா வெளிப்படுத்தியது
प्रविष्टि तिथि:
11 MAR 2025 12:17PM by PIB Chennai
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அனாஹிம் மாநாட்டு மையத்தில் 2025 மார்ச் 4 முதல் 7 வரை நடைபெற்ற இயற்கை பொருட்களின் கண்காட்சி வெஸ்ட் 2025-ல் இந்தியாவின் வளமான வேளாண் பாரம்பரியம் மற்றும் அதிகரித்து வரும் இயற்கை வேளாண்மை சிறப்பை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா) வெளிப்படுத்தியது. இயற்கை வேளாண் பொருட்கள் சந்தையில் இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை விரிவுபடுத்தும் வகையில் இயற்கை வேளாண்மை முறையிலான அரிசி, எண்ணெய் வித்துக்கள், மூலிகை செடிகள், வாசனை திரவியங்கள், பருப்பு வகைகள், இஞ்சி, மஞ்சள், ஏலக்காய் உட்பட பலவகையான பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் 13 முன்னணி ஏற்றுமதியாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சியையொட்டி 2025 மார்ச் 04 அன்று சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் சர்வதேச வாங்குவோர்-விற்போர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2025 மார்ச் 05 அன்று துணை தூதரகத்தின் வர்த்தக பிரிவு கான்சல் திரு அபிஷேக் குமார் சர்மா, இந்திய அரங்கு ஒன்றை திறந்துவைத்தார். இந்த அரங்கில் இந்தியாவின் வளமான இயற்கை வேளாண் பொருட்களால் செய்யப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இத்தகைய முன்முயற்சிகள் மூலம் இயற்கை வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க அபெடா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110124
***
TS/SMB/AG/KR
(रिलीज़ आईडी: 2110200)
आगंतुक पटल : 53