ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: திறன் மேம்பாட்டுக்கான புதிய முன்முயற்சிகள்
Posted On:
11 MAR 2025 12:14PM by PIB Chennai
2024-25 நிதியாண்டிற்கான ஜவுளி அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.4,417.03 கோடியாகவும், அடுத்த நிதியாண்டில் அதாவது 2025-26 நிதியாண்டிற்கு ரூ.5,272 கோடியாகவும் உள்ளது. உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ரூ.45 கோடியிலிருந்து (நிதியாண்டு 2024-25) ரூ.1,148 கோடியாகவும் (நிதியாண்டு 2025-26), சணல் ஜவுளி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.50 கோடியிலிருந்து (நிதியாண்டு 2024-25) 90 கோடியாகவும் (நிதியாண்டு 2025-26), மத்திய பட்டு வாரிய திட்டத்துக்கு ரூ.900 கோடியிலிருந்து (நிதியாண்டு 2024-25) ரூ.956.84 கோடியாகவும் (நிதியாண்டு 2025-26) பட்ஜெட் அதிகரிக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன.
ஜவுளி அமைச்சகமானது இளங்கலை பட்டதாரிகள், தொழில் திறன் பெறாத தொழிலாளர்கள், மறுதிறன் பெற விரும்பும் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளியின் பல்வேறு பயன்பாட்டு பகுதிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் உட்பட 50,000 நபர்களுக்கு பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், ஜவுளி அமைச்சகம் பொதுவாக சமர்த் என்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. நூற்பு மற்றும் நெசவு நீங்கலாக, ஜவுளித் துறையின் ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டல் சங்கிலியையும் உள்ளடக்கி, ஒழுங்கமைக்கப்பட்ட ஜவுளி மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொழில்துறையின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கவும், வேலைவாய்ப்பு சார்ந்த தேசிய திறன் தகுதிகள் கட்டமைப்பு இணக்கமான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் சமர்த் திட்டத்தின் கீழ் ரூ.330 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2027-28 வரையிலான ஏழு ஆண்டு காலத்திற்கு ரூ.4,445 கோடி மதிப்பீட்டில், ஏழு பிரதமரின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி மற்றும் ஆயத்த ஆடை (பிஎம் மித்ரா) பூங்காக்களை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டம் 2016 ஜனவரியில் தொடங்கப்பட்டது, இது 2022 மார்ச் 31 வரை அமல்படுத்தப்பட்டது.
இந்தத் தகவலை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
***
(Release ID: 2110117)
TS/IR/RR/KR
(Release ID: 2110194)
Visitor Counter : 14