தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் சர்வதேச மகளிர் தினம் 2025 ஐ கொண்டாடியது

Posted On: 11 MAR 2025 11:04AM by PIB Chennai

தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் தலைமையகம் 2025 மார்ச் 10, அன்று, சர்வதேச மகளிர் தினம் 2025 ஐ கொண்டாடியது. இரு வார காலம் நடைபெற்ற தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் சிறப்பு சேவைகளுடன் இது வெற்றிகரமாக நிறைவடைந்தது. இஎஸ்ஐசி தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பெண் ஊழியர்கள் மற்றும் பயனாளிகளின் உரிமைகள், அங்கீகாரம் மற்றும் நலனை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் தற்போதைய உறுதிப்பாட்டை குறிப்பிட்டுக் காட்டும் ஒரு நிகழ்வாக அமைந்தது.

இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தின கருப்பொருள், "நடவடிக்கையை விரைவுபடுத்துங்கள்" என்பது பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் தனது கட்டமைப்பிற்குள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வளர்ப்பதற்கும் இஎஸ்ஐசி-யின் தொடர்ச்சியான முயற்சிகளோடு ஒத்திசைவானதாக இருந்தது. அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தைப் பற்றி இஎஸ்ஐசி-யின் உயர் அதிகாரிகள் மற்றும் விருந்தினர் பேச்சாளர்கள் விவரித்தனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பெண் ஊழியர்களும் அவர்களின் பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

2025, பிப்ரவரி 24 முதல் மார்ச் 10 வரை இயங்கிய இஎஸ்ஐசி சிறப்பு சேவைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மற்றும் காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பயனளிக்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்கியது.

***

(Release ID: 2110087)
TS/IR/RR/KR


(Release ID: 2110136) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi , Odia