ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: விவசாயத்திற்கான நீர்ப்பாசன விநியோகங்களுக்கு ஆதரவு
Posted On:
10 MAR 2025 5:55PM by PIB Chennai
நீர், மாநில அரசின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், அதன் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மாநில அரசுகளே தங்களது சொந்த ஆதாரங்கள் மற்றும் முன்னுரிமைகளின்படி திட்டமிட்டு, நிதியுதவி அளித்து செயல்படுத்தி வருகின்றன. நீர்வள ஆதாரம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஏற்ப, தொழில்நுட்ப உதவி மற்றும் சில நேரங்களில் பகுதி நிதியுதவி அளிப்பது ஆகிய பணிகளில் மத்திய அரசின் பங்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டம் என்பது ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையால் செயல்படுத்தப்படும் இரண்டு முக்கிய கூறுகளை (விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன பயன் திட்டம் மற்றும் அனைத்து வயல்களுக்கும் தண்ணீர் திட்டம்) உள்ளடக்கிய ஒரு திட்டமாகும். 2021-22 முதல் 2025-26 வரையில் பிரதமரின் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு டிசம்பர் 2021-ல் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், அனைத்து வயல்களுக்கும் தண்ணீர் திட்டத்தின் கீழ் நிலத்தடி நீர் கூறுகளுக்கான ஒப்புதல் 2021-22 வரை தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது, பின்னர் பணிகள் முடியும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பு பிரதமரின் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் ஓர் அங்கமாக இருந்த ஒரு சொட்டுக்கு அதிக மகசூல் திட்டக் கூறு, இப்போது தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையால் தனியாக செயல்படுத்தப்படுகிறது. மேலும், நீர்நிலை மேம்பாட்டு கூற, நில வளத் துறையால் செயல்படுத்தப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு. ராஜ் பூஷண் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109945
***
RB/DL
(Release ID: 2110040)
Visitor Counter : 25