புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீட்டு உபயோக பொருட்கள் பயன்பாட்டு செலவு குறித்த ஆய்வு 2023-24

Posted On: 10 MAR 2025 2:10PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் குறிப்பிட்ட கால இடைவெளியில் வீட்டு உபயோகப் பொருட்கள் பயன்பாட்டு செலவு குறித்த ஆய்வை நடத்த இருக்கிறது. இதில் வீட்டு உபயோகத்தில் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் பயன்பாடு குறித்த தகவல்கள் திரட்டப்படுகின்றன.  சமீபத்திய ஆய்வு ஆகஸ்ட், 2023 –ஜூலை, 2024 காலத்திற்கான ஆய்வு நடத்தப்பட்டு அதன் விவரங்கள் 2025 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டன.

உணவு மற்றும் உணவு அல்லாத 405 வீட்டு உபயோக பொருட்கள் பயன்பாடு குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. இவ்வாறு திரட்டப்பட்ட தகவலில் அதிகமாக பயன்படும் பொருட்களாக கீழ்க்காணும் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

பயறு வகைகள், பருப்பு வகைகள் மற்றும் அதன் உப பொருட்கள், உப்பு, சர்க்கரை, பால் மற்றும் அதன் உப பொருட்கள், காய்கறிகள், பழங்கள் (புதிய மற்றும் உலர்ந்த), முட்டை, மீன், இறைச்சி, சமையல் எண்ணெய், வாசனை திரவியங்கள், பானங்கள், பதப்படுத்தப்பட்ட, பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவையும் உணவு அல்லாத பொருட்கள் வகையில், எரிபொருள், கழிவறைப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், வாடகை, ஆடைகள், படுக்கை, காலணிகள், கல்வி, போக்குவரத்து, பொழுதுபோக்கு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

இந்தியா முழுவதும் (அந்தமான் நிகோபார் தீவுகளில் செல்ல முடியாத சில கிராமங்கள் தவிர) கிராமங்கள் மற்றும் நகர்ப் பகுதிகளை உள்ளடக்கி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊரகப் பகுதிகளைப் பொறுத்தவரை, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நகர்ப்புறங்களில் முதல்நிலை அலகாக வட்டாரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம், திட்டமிடல் அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சக இணையமைச்சர் திரு ராவ்இந்தர்ஜித் சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109812

***

TS/SMB/LDN/KR/DL


(Release ID: 2109964) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi