சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுலாத் தலங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குதல்

प्रविष्टि तिथि: 10 MAR 2025 3:36PM by PIB Chennai

சுற்றுலா அமைச்சகம் தனது "சேவை வழங்குநர்களுக்கான திறன் மேம்பாடு" திட்டத்தின் மூலம் பீகார் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மூலம் வேலை சார்ந்த குறுகிய கால திறன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் சுற்றுலா சேவை வழங்குநர்களின் ஒவ்வொரு அடுக்கிலும் மனிதவளத்தை பயிற்றுவித்து மேம்படுத்துவதாகும், இதன் மூலம் நாட்டின் பரந்த சுற்றுலா ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது மற்றும் உள்ளூர் மக்களுக்கு தொழில்முறை நிபுணத்துவத்தை வழங்குவதாகும்.

நாட்டில் சுற்றுலாத் தலங்கள் மற்றும் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், 2024-25 நிதியாண்டில்  மூலதன முதலீட்டிற்கு மாநிலங்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தின்கீழ் 23 மாநிலங்களில் ரூ.3295.76 கோடி மதிப்பீட்டில் 40 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2109858)

TS/PKV/AG/KR


(रिलीज़ आईडी: 2109948) आगंतुक पटल : 45
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali