சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மையினர் நல அமைச்சகமானது சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார, கல்வி அதிகாரமளித்தலுக்காக நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது

Posted On: 10 MAR 2025 3:39PM by PIB Chennai

சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரின், குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த, சமுதாயத்தில் தனிச் சலுகை இல்லாத பிரிவினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் நல அமைச்சகம்  மத்திய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள ஆறு சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி அதிகாரமளித்தலுக்காக நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம்

தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகமானது சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டும் முயற்சிகளுக்கு சலுகைக் கடன்களை வழங்குவதன் மூலம் அதிகாரம் அளிக்கிறது. இந்தக் கழகம் காலவரம்புக் கடன், குறு நிதி, கல்விக் கடன் மற்றும் விராசாட் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டங்கள் அந்தந்த மாநில அரசுகள்  யூனியன் பிரதேச நிர்வாகங்களால் நியமிக்கப்பட்ட மாநில முகமைகள், பஞ்சாப் கிராமிய வங்கி, கனரா வங்கி மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

1994-95ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 28.02.2025 வரை சலுகைக் கடனாக ரூ.9485.04 கோடி வழங்கியுள்ளது. இதன் மூலம் சிறுபான்மையின சமுதாயத்தைச் சேர்ந்த 25.49 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். முஸ்லிம் பெண்கள் உட்பட சுமார் 89.68% பெண் பயனாளிகளுக்கு தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக்கழகம் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது, இது அவர்களின் வாழ்வாதாரத்தில் கணிசமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

---

(Release ID 2109860)

TS/IR/KPG/KR


(Release ID: 2109910) Visitor Counter : 31
Read this release in: English , Urdu , Hindi , Bengali-TR