சுற்றுலா அமைச்சகம்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை
Posted On:
10 MAR 2025 3:29PM by PIB Chennai
இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக சுற்றுலா அமைச்சகம் பல ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முன்முயற்சிகளை எடுத்துவருகிறது.
புனித யாத்திரை மேற்கொள்வதற்காக ஸ்வதேஷ் தர்ஷன், பாரம்பரிய விரிவாக்க இயக்கத்திற்கான தேசிய இயக்கம் (பிரஷாத்), விமானப் போக்குவரத்து இணைப்புகள், 167 நாடுகளுக்கு இ-விசா திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.
2022-ம் ஆண்டு 85,87,562 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். 2023-ம் ஆண்டு இது 1,92,45,817 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2022-ம் ஆண்டு 4,07,126 பேரும்,2023-ம் ஆண்டு 11,74,899 பேரும் வெளிநாட்டுப் பயணிகள் வந்துள்ளனர். புதுச்சேரிக்கு 2022-ம் ஆண்டு 862 பேரும், 2023-ம் ஆண்டு 31,214 பேரும் வெளிநாட்டுப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2109852)
TS/PKV/AG/KR
(Release ID: 2109902)
Visitor Counter : 14