உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரில் உள்ள பிரம்மானந்த் வித்யாதாமில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
Posted On:
08 MAR 2025 7:46PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும், கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரில் உள்ள பிரம்மானந்த் வித்யாதாமில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, முந்தைய அரசுகள், வாக்கு வங்கிக்கு பயந்து, நாட்டின் பிரச்சினைகளை நிலுவையில் வைத்திருந்தன என்று குறிப்பிட்டார். காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்குதல், முத்தலாக் விதிமுறையை ஒழித்தல், சீரான சிவில் குறியீடு, சி.ஏ.ஏ மற்றும் ராமர் கோயில் கட்டுமானம் போன்ற முக்கியமான பிரச்சினைகள் நிலுவையில் இருந்தன. ஆனால், பிரதமர் திரு நரேந்திர மோடி, 10 ஆண்டுகளுக்குள், நிலுவையில் இருந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார். 550 ஆண்டுகளுக்குப் பிறகு, ராமர் தனது பிரமாண்டமான கோவிலுக்குத் திரும்பினார் என்று திரு ஷா கூறினார். ஔரங்கசீப்பால் அழிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் வழித்தடம் மீண்டும் கட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்கே திரு மோடி அரசு முன்னுரிமை வழங்குகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த குறையையும் அரசு வைக்காது என்று அவர் உறுதியளித்தார். எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் நாட்டின் பாதுகாப்பை புறக்கணித்தனர். பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் வந்து, குண்டுகளை வெடிக்கச் செய்து விட்டு செல்வார்கள், ஆனால் எந்த எதிர்ப்பும் இல்லை. 2015-இல் உரி மற்றும் புல்வாமாவில் தாக்குதல்கள் நடந்தன. பிரதமரும், அரசும் மாறிவிட்டனர் என்பதையும், திரு நரேந்திர மோடி பிரதமராக இருப்பதையும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஒருவேளை உணரவில்லை போலும். திரு மோடி தலைமையில், 10 நாட்களுக்குள், சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய படையினர் நுழைந்து பயங்கரவாதிகளை அழித்தனர். அன்றிலிருந்து, இந்திய ராணுவம் அதன் எல்லைகளைப் பாதுகாக்க வலிமையாக உள்ளது என்பதையும், அதை எதிர்க்கத் துணிந்தவர்கள் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் முழு உலகமும் புரிந்து கொண்டது, என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2109511
*****
RB/DL
(Release ID: 2109698)
Visitor Counter : 10