கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
2025 செப்டம்பருக்குள் 150 திட்டங்களை முடிக்க கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது
Posted On:
08 MAR 2025 8:22PM by PIB Chennai
துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஸ்ரீநகரில் இரண்டு நாள் 'சிந்தனை அமர்வு, 2025' ஐ ஏற்பாடு செய்தது. இந்தியாவின் நீலப் பொருளாதாரத்தின் திறனை வெளிக்கொணர்வதற்கான தீர்வுகளை மதிப்பீடு செய்தல், மீட்டமைத்தல், கண்டறிதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், அமைச்சகத்தின் ரூ .2 ட்ரில்லியன் மதிப்புள்ள திட்டங்களை ஆய்வு செய்து, நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், 2025 செப்டம்பருக்குள் குறைந்தது 150 திட்டங்களை முடிக்க இலக்கை நிர்ணயித்தார்.
இந்த நிகழ்வு இந்தியாவின் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் திறன்களை வலுப்படுத்துதல், கடல்சார் உள்கட்டமைப்புக்கான நிதி மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை மேம்படுத்துதல் மற்றும் பசுமையான, நிலையான கப்பல் தொழிலுக்கு அழுத்தம் கொடுப்பதில் கவனம் செலுத்தியது. கடல்சார் அமிர்தகால தொலைநோக்குத் திட்டம் 2047-இல் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், "பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்தியாவின் கடல்சார் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் பாதைகளை மாற்றியமைப்பதில் எங்களது உறுதிப்பாடு அசைக்க முடியாதது. சிந்தனை அமர்வு 2025 புதிய வரையறைகளை அமைப்பதற்கும், இலக்குகளை மதிப்பாய்வு செய்வதற்கும், இந்தத் துறை தொடர்ந்து பொருளாதார முன்னேற்றத்தை இயக்குவதை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கியமான தளமாகும். கடல்சார் கண்டுபிடிப்பு மையங்களுடன் கூடிய சாகர்மாலா புதுமை முயற்சி, துறைமுக பசுமை மாற்றத் திட்டம், சாகர்மாலா டிஜிட்டல் சிறப்பு மையம் போன்ற புதுமையான திட்டங்கள் இத்துறையில் செயல்திறனை அதிகரிக்க அமைக்கப்படும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் நோக்கில், பாரத் கன்டெய்னர் கப்பல் பாதையை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். 2047-ஆம் ஆண்டுக்குள் உலகின் கப்பல் கட்டும் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். 4 மில்லியன் டன் மொத்த பதிவு செய்யப்பட்ட டன் (ஜி.ஆர்.டி) உடன் கப்பல்களை நிர்மாணிக்க கப்பல் கட்டும் தொழிலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்”, என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2109521
******
RB/DL
(Release ID: 2109695)
Visitor Counter : 11