மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

ஜனநாயகம் என்பது தேர்தல்களுடன் நின்றுவிடாமல், தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மற்றும் ஒருமித்த கருத்தின் மூலம் முன்னேறுகிறது: மக்களவை சபாநாயகர்

Posted On: 08 MAR 2025 8:58PM by PIB Chennai

கருத்தொற்றுமையும் கருத்து வேறுபாடும் ஜனநாயகத்தின் பலம், ஆனால் சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றங்களில் திட்டமிட்டு சீர்குலைவது ஜனநாயக மாண்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா  கூறியுள்ளார்.அ் பொதுமக்களுக்கு பொறுப்புணர்வை உறுதி செய்ய சட்டமன்ற நிறுவனங்கள் விவாதம் மற்றும் உரையாடலுக்கான மையங்களாக மாற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

'ராஜஸ்தானின் அரசியலமைப்பு கிளப்' தொடக்க விழாவில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிற பிரமுகர்களிடையே திரு பிர்லா உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் திரு வாசுதேவ் தேவ்னானி, மத்திய வேளாண் இணை அமைச்சர் திரு பகீரத் சவுத்ரி மற்றும் இதர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அரசியலமைப்பு கிளப் என்பது ஒரு கட்டிடம் மட்டுமல்ல, ஜனநாயக சொற்பொழிவு, சிந்தனை மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றிற்கு வழிகாட்டும் ஒரு தளம் என்று மக்களவை சபாநாயகர் குறிப்பிட்டார். ஜனநாயகம் என்பது தேர்தல்களோடு நின்றுவிடாமல், தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மற்றும் ஒருமித்த கருத்தின் ஊடாக முன்னேறுவதாகும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்த மன்றம் கொள்கை வகுப்பதையும், நல்லாட்சியையும் புதிய உயரத்திற்கு உயர்த்தும் என்று திரு பிர்லா கூறினார். தில்லியில் அரசியலமைப்பு மன்றம் என்ற கருத்து 1947-ல் அரசியலமைப்புச் சட்ட வரைவின் போது உருவாக்கப்பட்டது என்றும், அங்கு முறைசாரா விவாதங்கள் மற்றும் கொள்கை விவாதங்களுக்கான மேடையின் தேவை உணரப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். ராஜஸ்தானில் உள்ள இந்த மன்றம் ஜனநாயக உரையாடல் மற்றும் விவாதத்திற்கான மையமாக மாறும் என்றும், கருத்துக்கள், கொள்கைகள் மற்றும் ஆளுகை குறித்து வெளிப்படையாக விவாதிக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கும் என்றும் திரு பிர்லா குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2109533   

******


RB/DL


(Release ID: 2109693) Visitor Counter : 10


Read this release in: English , Urdu , Hindi