மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தெலுங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டத்தில் பல உற்பத்தி அலகுகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
प्रविष्टि तिथि:
08 MAR 2025 5:03PM by PIB Chennai
தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டம், திவிடிபள்ளியில் உள்ள மின்னணு உற்பத்தி தொகுப்பில் நான்கு உற்பத்தி அலகுகளுக்கு மத்திய ரயில்வே, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய திரு அஸ்வினி வைஷ்ணவ், "மின்சாரப் போக்குவரத்து அரசின் கவனம் செலுத்தும் ஒரு பகுதியாக உள்ளது. மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் சரியான உள்கட்டமைப்பு மற்றும் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்தியக் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். இந்த முயற்சியின் வெற்றியை எதிர்நோக்குகிறோம்" என்றார்.
மின்னணு உற்பத்தி தொகுப்பில் 307.47 ஏக்கர் நிலம் 4 நிறுவனங்களுக்கு (அதாவது, அமர ராஜா, ஆல்ட்மின் , லோகம் மெட்டீரியல் மற்றும் செல் எனெர்ஜி ) ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் திட்டமிடப்பட்ட முதலீடு ரூ. 10,574 கோடி ஆகும். இவை 19,164 (நேரடி- 5,864 & மறைமுக- 13,300) பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உறுதிபூண்டுள்ளது.
இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், தொழில்கள் மற்றும் வணிகம், சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு டி. ஸ்ரீதர் பாபு, மஹ்பூப்நகர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி அருணா டி.கே, சட்டமன்ற உறுப்பினர் திரு ஒய். ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோரும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109460
*****
SMB /DL
(रिलीज़ आईडी: 2109472)
आगंतुक पटल : 57