அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உயிரி பாலிமர்களின் உயிரி உற்பத்தி என்ற கருப்பொருளில், உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் நடைபெற்ற 9வது இணைய வழி கருத்தரங்கு
प्रविष्टि तिथि:
07 MAR 2025 4:14PM by PIB Chennai
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பயோ-இ மூன்று கொள்கையின் கீழ் உயிரி பாலிமர்களின் உயிரி உற்பத்தி குறித்து நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில், பயோபாலிமர் உயிரி உற்பத்தியில் முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. இதில் கல்வியாளர்கள், தொழில்த்துறை தலைவர்கள், ஸ்டார்ட்ப் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.
இந்தியா தனது கல்வி மற்றும் தொழில்துறை வலிமையைக் கருத்தில் கொண்டு, செலவு குறைந்த பயோபாலிமர் உற்பத்திக்கான ஒரு சிறப்பான சூழலைஉருவாக்கத் தயாராக உள்ளதாக, மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி டாக்டர் வைஷாலி பஞ்சாபி தெரிவித்தார். இந்த கருத்தரங்கு 'உயிரி பாலிமர்களின் உயிரி உற்பத்தி'யில் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் துறையில் உள்ள சவால்கள் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109105
***
TS/GK/RJ/DL
(रिलीज़ आईडी: 2109207)
आगंतुक पटल : 35