மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பான இணைய தினத்தில் பொறுப்பான இணையப் பயன்பாடு குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரம்

प्रविष्टि तिथि: 07 MAR 2025 5:30PM by PIB Chennai

ஆண்டுதோறும் பிப்ரவரி 11-ம் தேதி பாதுகாப்பான இணைய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.   இதன் ஒரு பகுதியாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டது.

ஆன்லைன் பாதுகாப்பு நடைமுறை மற்றும் அதிகரித்து வரும் இணையவழி அச்சுறுத்தல்கள் குறித்து இணைய பயன்பாட்டாளர்களுக்கு எடுத்துரைப்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது.

தகவல் பாதுகாப்புக் கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு இணையவழி பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விரிவான பிரச்சாரம் 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள  599 மாவட்டங்கள், 493 தாலுக்காக்கள் மற்றும் 134 கிராமப் பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்பட்டன.  இது 3.08 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளைச் சென்றடைந்தது. இணைய வழி அச்சுறுத்தல், மின்னணு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பொறுப்பான ஆன்லைன் பயன்பாடு குறித்து  வினாடி வினா போட்டி கள்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

எப்.எம்.வானொலிகள், பிரசார் பாரதி மற்றும் விவித் பாரதி நெட்வொர்க்

மூலம் ஒலிபரப்பட்ட இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் 2.27 கோடி பேரை சென்றடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109132

****

TS/GK/RJ/DL


(रिलीज़ आईडी: 2109191) आगंतुक पटल : 41
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी