பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவத்தின் இரண்டு நாள் விளக்கக் காட்சி - ‘சௌர்ய வேதனம் உத்ஸவ்’ - மோதிஹரியில் தொடங்கியது

Posted On: 07 MAR 2025 4:36PM by PIB Chennai

ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் துடிப்பு மிக்க விளக்கக் காட்சியான சௌர்ய வேதனம் உத்சவ், முதல் முறையாக இன்று ( 2025, மார்ச் 07) பீகாரில் உள்ள மோதிஹரியில் தொடங்கியது. இந்த இரண்டு நாள் நிகழ்வில் ராணுவ உபகரணங்கள், தற்காப்பு கலைகள், ராணுவ இசைக்குழுக்களின் நிகழ்ச்சி, சிறப்புப் படைகளின் போர் செயல்பாடு, மோட்டார் சைக்கிள், நாய் கண்காட்சி மற்றும் பல விளக்கக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த விழாவில் பீகார் ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான்; நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான திரு ராதா மோகன் சிங்; ராணுவ தளபதி மத்திய கமாண்ட் லெப்டினன்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா மற்றும் ராணுவ அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், என்.சி.சி. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றதன் மூலம் இந்த நிகழ்வு மேலும் மெருகூட்டப்பட்டது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, நாட்டைப் பாதுகாக்க தங்கள் இன்னுயிரீந்த ராணுவ வீரர்களுக்கு ஆளுநர் அஞ்சலி செலுத்தினார்.

மோதிஹரியில் இவ்வளவு பெரிய நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது  இளைஞர்கள் ராணுவத்தில் சேர  பெரிதும் உதவும் என்று திரு ராதா மோகன் சிங் தனது உரையில் தெரிவித்தார். இந்தப் பிரமாண்டமான விழாவின் ஒரு பகுதியாக,இந்திய ராணுவத்தின் பிரதான போர் பீரங்கியான  டி-90 பீரங்கி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கே-9 வஜ்ரா, சுயமாக இயக்கப்படும் பீரங்கி துப்பாக்கி, பிஎம்பி வாகனங்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் கண்டுபிடிக்கும் ரேடார் சுவாதி போன்றவை இடம் பெற்றுள்ள  கண்காட்சிகள் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தன.

கடற்படை இசைக்குழுவின் நிகழ்ச்சிகள், ஆயுதப் படைகளுக்கு இடையிலான கூட்டுறவை எடுத்துக்காட்டும் வகையில் பார்வையாளர்களைக் கவர்ந்தன. ஆயுதப் படைகளின் அனைத்து துணிச்சலான வீரர்களின் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவுச்சின்னம் அந்த இடத்தில் அமைக்கப்பட்டது. அவர்களின் துணிச்சலான செயல்கள் மற்றும் வீரம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, வீரதீரச் செயல்களுக்குப் புகழாரம் சூட்டப்பட்டது . விமானப்படை மற்றும் கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109108   

***

TS/SMB/DL


(Release ID: 2109182) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi