ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முழுமையான அணுகுமுறையுடன் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணி

Posted On: 07 MAR 2025 3:12PM by PIB Chennai

தேசிய நதிகளில் ஒன்றான கங்கை நதியைத் தூய்மைப்படுத்தி புத்துயிரூட்டும் வகையில் இரண்டு முன்னோடித் திட்டங்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.20,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருந்தது.

கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகள் புத்துயிர் பெறும் நமாமி கங்கை திட்டத்தைக் கடந்த 2014-15-ம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்திற்காக மார்ச் 2021-ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இதை 2026 மார்ச் வரை நீட்டிக்க கூடுதலாக ரூ.22,500 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய கங்கை திட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டிற்கு ரூ.3,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் எதிர்கால சந்ததியினருக்காக தூய்மையான மற்றும் செழிப்பான கங்கையை உறுதி செய்வதற்கான அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109078

****

TS/GK/RJ/DL


(Release ID: 2109177) Visitor Counter : 22