சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்கத் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்: உள்ளடக்கம் மற்றும் தலைமைத்துவத்தைக் கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வு
Posted On:
06 MAR 2025 7:37PM by PIB Chennai
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சுரங்க அமைச்சகம் கோல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து "சுரங்கத் துறையில் பெண்களைக் கொண்டாடுதல்" என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி, இணையமைச்சர் திரு. சதீஷ் சந்திர துபே, தெலங்கானா மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி டி. அனசுயா சீதக்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்துறையில் பெண்களின் பங்களிப்பை பாராட்டும் விதமாக, பெண் பங்கேற்பாளர்கள் விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வின் போது, சுரங்கத் தொழிலில் தனித்துவமான பங்களிப்புகளுக்காக 46 சிறந்த தொழில் வல்லுநர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஐ.பி.எம், டாடா, ஜி.எஸ்.ஐ, அதானி, வேதாந்தா, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பெண்கள் தடைகளை உடைத்து தொழில்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியதற்காக கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ]அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, சுரங்கத் துறையில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரித்தார் மற்றும் பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தத் துறையில் சம வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளை ஊக்குவித்தார். பாலின பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், சுரங்கத் தொழிலில் பெண் தொழில் வல்லுநர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதற்கும் அரசின் முன்முயற்சிகளை மத்திய இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே எடுத்துரைத்தார். ஆதரவான கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகள் மூலம் சுரங்கத் தொழில் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசின் அர்ப்பணிப்பை தெலங்கானா பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி டி அனசுயா சீதக்கா வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் நடைபெற்ற இரண்டு குழு விவாதங்களில், சுரங்கத் தொழிலில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சவால்கள் மற்றும் உத்திகள் குறித்த நுண்ணறிவுகளை பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108900
-----
RB/DL
(Release ID: 2108941)
Visitor Counter : 19