பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொதுமக்கள் குறைகளைத் திறம்பட தீர்த்து வைப்பதற்கு 10 மாநிலங்களின் சேவை உரிமை ஆணையர்களுடன் மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை ஒத்துழைப்பை அதிகரிக்கிறது

प्रविष्टि तिथि: 06 MAR 2025 5:00PM by PIB Chennai

26.12.2024 தேதி பிரகதி ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கிய வழிகாட்டுதலின்படி, மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையானது சேவை வழங்கலை மேம்படுத்தவும், பொதுமக்களின் குறைகளைத் திறம்படத் தீர்த்து வைப்பதற்காகவும் 10 மாநிலங்களைச் சேர்ந்த சேவை உரிமை ஆணையர்களுடன் தனது ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது:

  • மாநிலங்களின் சேவை உரிமை ஆணைய இணையதளங்களை சிபிஜிஆர்ஏஎம்எஸ் (CPGRAMS) இணையதளத்துடன் ஒருங்கிணைத்தல்.
  • மாநில அரசுகளின் சேவைகளை மேம்படுத்துவதற்காக சிபிஜிஆர்ஏஎம்எஸ் தளத்தில் மக்கள் குறைகள் தொகுக்கப்பட்டு சேவை உரிமை ஆணையர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது
  • சேவை உரிமை ஆணையர்கள் மூலம் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் ஆவணப்படுத்தப்படும்.

சேவை வழங்கலில் செயல்திறன், சிபிஜிஆர்ஏஎம் தளத்தில் பெறப்பட்ட குறைகளின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையே மாறுபட்ட சூழல் இருப்பதாக சேவை உரிமை ஆணையர்கள் தெரிவித்தனர். சேவை வழங்கல் தொடர்பாக சிபிஜிஆர்ஏஎம்எஸ் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட குறைகளின் வகைகளில் கவனம் செலுத்தி, சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

***

TS/PLM/AG/DL


(रिलीज़ आईडी: 2108888) आगंतुक पटल : 34
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी