மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுப் புரட்சி

இடுகை இடப்பட்ட நாள்: 06 MAR 2025 4:09PM by PIB Chennai

பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, கணினி சக்தி, கிராபிக்ஸ் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை குறைந்த செலவில் அணுகக்கூடிய வகையிலான சூழல் அமைப்பை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணையுடன் மத்திய அரசு வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அனைத்து நிலைகளிலும் கொண்டு செல்லும் வகையிலும் உலக அளவில் தொழில்நுட்ப  நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள், புத்தொழில் நிறுவனங்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப  உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப இயக்கம் மற்றும் அதற்கான சிறப்பு மையங்களை நிறுவுதல் போன்ற முன்முயற்சிகள் நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நட்ப சூழல் அமைப்பை வலுப்படுத்தி, புதுமை மற்றும் தற்சார்பு நிலையை அடைய வழி வகுக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=210881

**

TS/SV/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2108856) வருகையாளர் எண்ணிக்கை : 153
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati