அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உலோகக்கலவைகளை உறுதித் தன்மையுடனும் சிறந்த தரத்திலும் உருவாக்குவதற்கான ஆராய்ச்சிப் பணிகள்
प्रविष्टि तिथि:
06 MAR 2025 3:31PM by PIB Chennai
சமவிகிதத்தில் பல தனிமங்கள் கொண்ட உலோகக் கலவைகளை வடிவமைப்பதற்கான புதிய அணுகுமுறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அவற்றின் பயன்பாடு மற்றும் விரிவான ஆய்வுகளின் மூலம் புதிய சாத்தியக் கூறுகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒன்று அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட முக்கிய தனிமங்களால் ஆன பன்முகத் தன்மை கொண்ட புதிய வகை பொருட்கள். அவற்றின் உறுதித் தன்மையை மேம்படுத்தும் வகையில், மேற்கொள்ளப்படும் கலவை மாற்றங்கள் காரணமாக அந்த உலோகங்கள் பாதிப்புக்குள்ளாவதிலிருந்து தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
இதனை உறுதி செய்யும் வகையில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் உலோகப் பொறியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் அங்கூர் சவுகான் மற்றும் அவரது குழுவினர் குரோமியம் -மாங்கனீசு-இரும்பு-கோபால்ட்-நிக்கல(Cr-Mn-Fe-Co-Ni) ஆகிய மூலக்கூறு கலவையில் உருவாக்கப்படும் உலோகங்களின் உறுதித் தன்மையை மேம்படுத்துவதுடன் பாதிப்புக்குள்ளாகும் தன்மையைக் குறைக்க முடியும் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108794
----
TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2108855)
आगंतुक पटल : 44