வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம், இந்தியாவின் பசுமை உற்பத்தி, தொழில்துறைக்கான கொள்கை வடிவமைப்பு ஆகியவற்றின் பங்கு குறித்து சர்வதேச மாநாடு கவனம் செலுத்துகிறது
Posted On:
06 MAR 2025 12:29PM by PIB Chennai
வளர்ந்து வரும் புவிசார் அரசியலின் ஒரு பகுதியாக நாட்டின் தொழில்துறை கொள்கைகளை வடிவமைப்பது உற்பத்திக்கான போட்டித்தன்மையை ஏற்படுத்தும் வகையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டங்களை செயல்படுத்துவது, பசுமை உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பது நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் குறித்து வர்த்தக மற்றும் முதலீட்டுக்கான சட்ட மையம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
சர்வதேச வர்த்தகம் அது தொடர்பான சட்ட மையம், நல்சார் சட்டப் பல்கலைக்கழகம், உலக வர்த்தக நிறுவனம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் எதிர்காலத்திற்குத் தேவையான தொழில்துறை கொள்கை, உலகளாவிய போட்டித்திறன் போன்ற அம்சங்களில் விவாதம் நடைபெற்றது. இந்த சர்வதேச மாநாடு 2025 ஜனவரி 17 முதல் 19 வரை ஹைதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில், தொழில்துறை கொள்கை, வர்த்தக விதிமுறைகள் சர்வதேச வர்த்தக அமைப்புடன் ஒத்திருப்பதை உறுதி செய்வதன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் ஒழுங்குமுறை அமைப்புகளின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் தற்போதைய புவிசார் அரசியல் சூழல் குறித்தும் எரிசக்தி மாற்றம் குறித்த விவாதங்களும் இடம் பெற்றிருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108731
----
TS/SV/KPG/KR
(Release ID: 2108783)
Visitor Counter : 31