சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
உலகின் நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு 2025 தொடக்க அமர்வில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரை
Posted On:
05 MAR 2025 7:22PM by PIB Chennai
எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (தேரி) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த உச்சிமாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ், உலகளாவிய தெற்கு பருவநிலை செயல்திட்டத்தை வகுக்கும் நிலையில் இருப்பதாகவும் உலகம் இப்போது இந்தியாவை ஒரு தலைமை நாடாகப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டில் மட்டும் இந்தியா அதன் பசுமை இல்ல வாயு உமிழ்வை 7.93% குறைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இது காலநிலை நடவடிக்கைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் தெற்கு பகுதி நாடுகளின் முக்கிய பங்களிப்பை எடுத்துரைத்த அமைச்சர், சர்வதேச அளவில் ஒத்துழைப்பு மற்றும் நடவடிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சர்வதேச சூரியமின் சக்தி கூட்டணி, பேரிடரை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி, சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கம் உள்ளிட்ட உருமாற்ற உலகளாவிய முன்முயற்சிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்னின்று நடத்தி வருவதாகவும் அவரது வழிகாட்டுதலின் கீழ், உலகளாவிய நிலைத்தன்மைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108582
***
TS/GK/RJ/DL
(Release ID: 2108618)
Visitor Counter : 19