அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

'இந்திய அறிவுசார் அமைப்புகளில் திறன் மேம்பாடு ' ஆவணப்படுத்தல், சரிபார்த்தல் மற்றும் தகவல் தொடர்பு குறித்த தேசிய பயிலரங்கு

प्रविष्टि तिथि: 05 MAR 2025 11:09AM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுமம் (சிஎஸ்ஐஆர்) - தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் தேசிய முன்முயற்சியான ஸ்வஸ்திக்  எனப்படும் அறிவியல் ரீதியாக சரிபார்க்கப்பட்ட சமூக பாரம்பரிய அறிவு  என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை டி.டி.ஜி.டி வைஷ்ணவ் கல்லூரியில் 'இந்திய அறிவுசார் அமைப்புகள்:  திறன் மேம்பாடு, ஆவணப்படுத்துதல், சரிபார்ப்பு, தகவல் தொடர்பு' குறித்த ஒரு நாள் தேசிய பயிலரங்கை நடத்தியது. நாட்டின் பாரம்பரியமிக்க அறிவாற்றலை அறிவியல் பூர்வமாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கில் ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், அறிவியல் துறை சார்ந்த வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்தப் பயிலரங்கில் சென்னை கொள்கை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பத்மஸ்ரீ பேராசிரியர் திரு எம்.டி. ஸ்ரீனிவாஸ், இந்திய அறிவுசார் அமைப்புக்கான மையத்தின் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் கே.விஜயலட்சுமி, டி.டி.ஜி.டி வைஷ்ணவ் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.சந்தோஷ் பாபு, சி.எஸ்.ஐ.ஆர் - என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டி.டி.ஜி.டி வைஷ்ணவ் கல்லூரியின் இணைப் பேராசிரியர் டாக்டர் உத்ரா துரைராஜன் வரவேற்பு ஆற்றினார். பேராசிரியர் திரு எம்.டி. ஸ்ரீனிவாஸ் தனது துவக்கவுரையில் இந்தியாவின் செறிவான அறிவுப் பாரம்பரியத்தை எடுத்துரைத்ததோடு

இந்திய பாரம்பரிய அறிவை நவீன அறிவியலுடன் இணைப்பதற்குத் தேவையான முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108280

 

----

TS/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2108429) आगंतुक पटल : 75
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी