கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் திறன் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார்

Posted On: 04 MAR 2025 6:41PM by PIB Chennai

திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் 37 படுக்கைகள் கொண்ட நோயாளி பராமரிப்பு அறை  வசதி தொகுப்பை  உருவாக்குவதற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சர் திரு  சர்பானந்த சோனாவால் இன்று அடிக்கல் நாட்டினார். நோயாளிகளுக்கு மேம்பட்ட மருத்துவ பராமரிப்புடன் நான்கு தளங்களில் முழுமையான  வசதிகள் கொண்ட நான்கு மாடி கட்டடம்  ரூ. 8.89 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும். ஆயில் இந்தியா லிமிடெட் அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக இந்த செலவை ஏற்கிறது.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு  சர்பானந்த சோனாவால் , “பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் , இந்தியாவில் சுகாதார அமைப்பு மிகப்பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இது சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பயனுள்ளதாக மாற்றியுள்ளது. ஆயுஷ்மான் ஆரோக்கிய பாரத் இந்தியாவின் சுகாதார நிலைமையை குறைந்த செலவிலான, அணுகக்கூடிய மற்றும் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் நோக்கில் நாட்டை வழிநடத்துகிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த பாரதத்தின் தொலைநோக்கை அடைய சுகாதாரம் முக்கியமானது” என்றார்.

நல்ல ஆரோக்கியம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகும். யோகா, சீரான ஊட்டச்சத்து மற்றும் கவனத்துடன் வாழ்வதன் மூலம், நாம் வலிமை, மீள்தன்மை மற்றும்  நல்லிணக்கத்தை உருவாக்குகிறோம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது வாழ்க்கையில் ஆண்டுகளைச் சேர்ப்பது மட்டுமல்ல - அது ஆண்டுகளில் வாழ்க்கையை  சேர்ப்பது பற்றியது.மனிதகுலத்தின் எதிர்கால பராமரிப்பாளர்களாக, வாழ்க்கையை நலப்படுத்தவும் மாற்றவும் உங்களுக்கு சக்தி உள்ளது. உங்களுக்கு சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்ல மனநிலை கிடைக்க வாழ்த்துகிறோம், ஏனெனில் இந்த பலங்களுடன், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் உங்கள் பங்களிப்பு இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று மாணவர்களிடம்  அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108168

***

TS/SMB/DL


(Release ID: 2108214) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi