பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படைக் கப்பல் குதார் இலங்கையின் கொழும்பு சென்றடைந்தது
Posted On:
04 MAR 2025 6:15PM by PIB Chennai
கடல்சார் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், கிழக்கு மண்டலக் கடற்படையின் கீழ் இயங்கும் கிழக்கு கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் குதார், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையின் கொழும்புவை சென்றடைந்தது. கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் சர்மா, இலங்கைக் கடற்படையின் மேற்கு கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் சில்வாவை சந்தித்தார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, இரு கடற்படைகளின் பணியாளர்களும் தொழில்முறைத் தொடர்புகள், அறிவுப் பகிர்வு அமர்வுகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இது இரு கடற்படைகளுக்கும் இடையிலான செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்தும்.
இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை வலியுறுத்துகிறது. இது இந்திய அரசின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' மற்றும் 'பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி' ஆகிய முயற்சிகளின் கீழ் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துகிறது.
***
TS/PKV/AG/DL
(Release ID: 2108192)
Visitor Counter : 16