சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய சுகாதார இயக்கத்திற்கான 9-வது வழிகாட்டுதல் குழு கூட்டத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே.பி. நட்டா தலைமை தாங்கினார்
Posted On:
04 MAR 2025 5:31PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதல் குழுவின் ஒன்பதாவது கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தலைமை தாங்கினார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர்கள் திரு பிரதாப்ராவ் ஜாதவ், திருமதி. அனுப்ரியா படேல், நித்தி ஆயோக்கின் துணைத் தலைவர் திரு சுமன் கே. பெரி, நித்தி ஆயோக்கின் உறுப்பினர் திரு வி.கே. பால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த இயக்கத்தின் கீழ் உள்ள மிக உயர்ந்த கொள்கை உருவாக்கும் மற்றும் வழிநடத்தும் குழு, சுகாதாரத் துறைக்கு பரந்த கொள்கை வழிகாட்டுதலையும், நிர்வாகத்தையும் வழங்குகிறது. மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ், குடிநீர், பஞ்சாயத்து ராஜ், வடகிழக்கு பிராந்திய மேம்பாடு உள்ளிட்ட மத்திய அரசு அமைச்சகங்களின் செயலாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், கல்வி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், செலவினத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள், உத்தராகண்ட், சத்தீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட அதிக கவனம் செலுத்தும் மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், நித்தி ஆயோக் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு நட்டா, தேசிய சுகாதார இயக்கத்தின் சாதனைகளைப் பாராட்டினார். மேலும் பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களின் முடிவுகளை உறுதி செய்வதில் வழிகாட்டுதல் குழுவின் பங்கிற்கு நன்றி தெரிவித்தார். "பல்வேறு சுகாதாரத் திட்டங்களின் நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் நோக்கங்களின் மொழிபெயர்ப்பை உறுதி செய்வதன்" அவசியத்தை அவர் வலியுறுத்தினார், இதற்காகத் தலைமை மருத்துவ அதிகாரிகள் போன்ற அதிகாரிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். நிர்வாகத் தடைகளை மேற்கோள் காட்டி, தலைமை மருத்துவ அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் குறித்தும், அடிமட்ட அளவில் சுகாதாரத் திட்டங்களின் தேவையான முடிவுகளை அடைவதற்கு வழிவகுத்தல் குறித்தும் அவர் விளக்கினார். அவர்களின் திறன்களை சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108121
***
TS/PKV/AG/DL
(Release ID: 2108160)
Visitor Counter : 21