பாதுகாப்பு அமைச்சகம்
16-வது ஜம்போ மஜும்தார் சர்வதேச கருத்தரங்கை விமானப்படைத் தளபதி தொடங்கிவைத்தார்
प्रविष्टि तिथि:
04 MAR 2025 5:00PM by PIB Chennai
விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், விமானப்படை ஆடிட்டோரியத்தில் விமானப்படை ஆய்வுகள் மையம் ஏற்பாடு செய்த 16-வது ‘ஜம்போ’ மஜும்தார் சர்வதேசக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். விமானப்படை ஆய்வுகள் மைய தலைமை இயக்குநர் ஏர் வைஸ் மார்ஷல் அனில் கோலானி (ஓய்வு) வரவேற்றார்.
‘ஜம்போ’ மஜும்தார் சர்வதேச கருத்தரங்கு என்பது சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் சிறந்த போர் விமானியான மறைந்த விங் கமாண்டர் கருண் கிருஷ்ணா மஜும்தாரின் நினைவாக ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர நிகழ்வாகும்.
ஒருங்கிணைந்த விண்வெளி மேலாண்மை, எதிர்காலத்தில் ட்ரோன்களின் பயன்பாடு, வான்வழிப் போரில் இணையவழி தாக்கம், 5-வது தலைமுறை விமானங்களில் வளர்ந்து வரும் மற்றும் சிறப்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோக்கி செல்லும் வழி போன்ற பல தலைப்புகள் பிரபல குழு உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆர்வலர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கு இளைஞர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களிடையே ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தூண்டியது. விண்வெளித் துறையில் எதிர்கால ஈடுபாடுகளுக்கு வழி வகுத்தது.
***
(Release ID: 2108093)
TS/PKV/AG/RR
(रिलीज़ आईडी: 2108118)
आगंतुक पटल : 71