சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலத்தின் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் பிரதமர் சஃபாரி சென்றார்

கடந்த பல ஆண்டுகளாக ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதை உறுதி செய்த கூட்டு முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 03 MAR 2025 7:22PM by PIB Chennai

கம்பீரமான ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக அறியப்படும் குஜராத்தின் கிர்  வனவிலங்கு சரணாலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சஃபாரி சென்றார். கடந்த பல ஆண்டுகளாக ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை  சீராக அதிகரிப்பதை உறுதி செய்த கூட்டு முயற்சிகளை அவர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டதாவது:

"இன்று காலை,உலக வனவிலங்கு தினத்தை  #WorldWildlifeDay முன்னிட்டு, நான் கிர்  வனவிலங்கு சரணாலயத்தில் சஃபாரி சென்றேன், இது கம்பீரமான ஆசிய சிங்கங்களின் தாயகமாகும். நான் குஜராத் முதல்வராக பணியாற்றியபோது நாங்கள் கூட்டாக செய்த பணிகளை கிர் பயணம் நினைவூட்டியது. கடந்த பல ஆண்டுகளில், ஆசிய சிங்கங்களின்  எண்ணிக்கை  சீராக உயர்ந்து வருவதை கூட்டு முயற்சிகள் உறுதி செய்துள்ளன. ஆசிய  சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடி சமூகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் பங்கு சமமாக பாராட்டத்தக்கது.

"இதோ  கிர் வனவிலங்கு சரணாலயத்தின்   மேலும் சில காட்சிகளைப் பகிர்கிறேன். எதிர்காலத்தில் கிர் சரணாலயத்திற்கு வந்து பார்வையிடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்."

"கிர் வனவிலங்கு சரணாலயத்தின் ஆண் மற்றும் பெண் சிங்கங்கள்! இன்று காலை சில புகைப்படங்களை எடுக்க முயற்சித்தேன்"

***

RB/DL


(Release ID: 2107948) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi