சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
03 MAR 2025 7:20PM by PIB Chennai
வன உயிரின பாதுகாப்பில் நாட்டின்அர்ப்பணிப்பு மிகுந்த முயற்சிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். கடந்த தசாப்தத்தில், புலிகள், சிறுத்தைகள் மற்றும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது, இது அதன் வளமான பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான நாட்டின் ஆழமான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
சமூக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"கடந்த தசாப்தத்தில், புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது வனவிலங்குகளை நாம் எவ்வளவு ஆழமாக நேசிக்கிறோம் என்பதையும், விலங்குகளுக்கு நிலையான வாழ்விடங்களை உருவாக்க எவ்வாறு உழைத்து வருகிறோம் என்பதையும் குறிக்கிறது. #WorldWildlifeDay"
***
RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2107931)
வருகையாளர் எண்ணிக்கை : 53