பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியக் கடற்படையின் முதல் பயிற்சி படைப்பிரிவு தாய்லாந்தின் புக்கெட் துறைமுகத்தை சென்றடைந்தது

प्रविष्टि तिथि: 03 MAR 2025 6:23PM by PIB Chennai

தென்கிழக்கு ஆசியாவிற்கான முதல் பயிற்சி படைப்பிரிவின் (1TS) தற்போதைய பயிற்சியின் ஒரு பகுதியாக, ஐஎன்எஸ் ஷர்துல்,  ஐஎன்எஸ் சுஜாதா மற்றும் .சி.ஜி.எஸ் வீரா ஆகிய போர்க்கப்பல்கள் தாய்லாந்தின் புக்கெட் துறைமுகத்தை 2025  மார்ச் 1-ம் தேதி சென்றடைந்தது. ஆர்.டி.என் இசைக்குழுவின் இசைக்கு மத்தியில் ராயல் தாய் கடற்படை (ஆர்.டி.என்) கப்பல்களுக்கு அன்பான வரவேற்பு அளித்தது. மூத்த அதிகாரிமுதல் பயிற்சிப் படைப்பிரிவின் கேப்டன் அன்சுல் கிஷோர் மற்றும் கப்பல்களின் தலைமை அதிகாரிகளுடன் மூன்றாவது கடற்படை பகுதி தலைமை தளபதி ரியர் அட்மிரல் சுவத் டோன்சாகுலை சந்தித்தனர். பிராந்திய பாதுகாப்பு, கூட்டுப் பயிற்சிக்கான வழிமுறைகள் மற்றும் நல்லெண்ண நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆர்டிஎன்-ன் மூத்த தலைவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோருக்கு முதல் பயிற்சிப் படைப்பிரிவுக்கு கப்பலில் வரவேற்பு அளிக்கப்பட்டதுஇந்திய கடற்படை மற்றும் ராயல் தாய் கடற்படை இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான ஆற்றல்மிக்க நடவடிக்கைகளில் ஈடுபடும்இந்த சந்திப்பில் தொழில்முறை சார்ந்த கலந்துரையாடல்கள், யோகா அமர்வுகள், ஒத்திகைகள், நட்பு விளையாட்டுப் போட்டிகள், கடற்படை இசைக்குழுவின்  செயல்திறன் போன்றவை அடங்கும்.

இந்திய கடற்படை மற்றும் ராயல் தாய் கடற்படை இடையே உள்ள நெருங்கிய நட்புறவை பராமரிக்கப்பட்டு வருவதுடன், இதனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பயணம் இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையே சிறந்த புரிதல் மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவுகிறது.

***

TS/SV/KPG/DL


(रिलीज़ आईडी: 2107885) आगंतुक पटल : 63
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी