நிலக்கரி அமைச்சகம்
குஜராத் மாநிலம் காந்திநகரில் நிலக்கரி சுரங்க வர்த்தக ஏல நடைமுறை குறித்த நிகழ்ச்சி- நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு
Posted On:
03 MAR 2025 3:04PM by PIB Chennai
பொதுத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிலக்கரி தொடர்பான முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, 'நிலக்கரி சுரங்க ஏலங்கள், நிலக்கரித் துறையில் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் காந்திநகரில் மத்திய நிலக்கரி அமைச்சகம் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் அத்துறைக்கான இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், நியமன அதிகாரியுமான திருமதி ரூபிந்தர் பிரார் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முதலீட்டாளர்களுக்கு உள்ள சாத்தியங்கள் குறித்தும், வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கப் பணிகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எரிசக்தி பாதுகாப்பு, நிலக்கரித் துறையில் தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதற்காக இது போன்ற நிகழ்ச்சிகளை அமைச்சகம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், நியமன அதிகாரியுமான திருமதி ரூபிந்தர் பிரார், நாட்டின் எதிர்காலத் தேவைக்கான எரிசக்தி உற்பத்தி இலக்கை நிர்ணயிப்பதில் வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கத்தின் ஏல நடைமுறைகள் குறித்து வலியுறுத்தினார். நிலக்கரி பல தசாப்தங்களுக்கு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பின் முக்கிய அங்கமாக இருக்கும் என்றும், தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் தடையில்லா மின் விநியோகத்தை உறுதி செய்வதிலும் அது முக்கிய பங்காற்றும் என்றும் அவர் எடுத்துரைத்தார். செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல், நிதிச் சலுகைகளை வழங்குதல், வர்த்தகம் புரிதலை எளிதாக்குதல் ஆகியவற்றின் மூலம் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான சூழல் அமைப்பை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். ஒற்றைச் சாளர அனுமதி முறை குறித்து எடுத்துரைத்த அவர், இது விரைவான அனுமதிகளை வழங்க வகை செய்துள்ளது என்றும், அனைத்து பங்குதாரர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107735
**
TS/SV/KPG/RR
(Release ID: 2107787)
Visitor Counter : 14