எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எம்ஓஐஎல் பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவிலான உற்பத்தியை கண்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 03 MAR 2025 10:21AM by PIB Chennai

மாங்கனீஸ் தாது இந்தியா லிமிடெட் (எம்ஓஐஎல்) 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவிலான உற்பத்தியைக் கண்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் 1.53 லட்சம் டன் மாங்கனீசு (மில்லியன்) தாது உற்பத்தியைச் செய்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,455 மீட்டர் ஆழத்திற்கு ஆய்வு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 43% வளர்ச்சியை அடைந்துள்ளது.

ஏப்ரல்-பிப்ரவரி, 2025 காலகட்டத்திலும், எம்ஓஐஎல் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது:

14.32 லட்சம் டன் அளவிற்கு விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 3% அதிகமாகும்.

94,894 மீட்டர் ஆழத்திற்கு ஆய்வை மேற்கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 20% அதிகம்.

இந்த சிறந்த சாதனைக்கு வழிவகுத்த தொடர்ச்சியான முயற்சிகளுக்காக எம்ஓஐஎல் குழுவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. அஜித் குமார் சக்சேனா அக்குழுவினரைப் பாராட்டினார். வரும் ஆண்டில் நிறுவனம் அதிக வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

***

(Release ID: 2107637)

TS/IR/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2107664) வருகையாளர் எண்ணிக்கை : 64
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी