தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயல் திறன் மேம்பாட்டுத் திட்டம் - குளோபல் சவுத் அமைப்பின் தேசிய மனித உரிமைகள் ஆணைய மூத்த அலுவலர்களுக்கு வழங்கப்படவுள்ளது
Posted On:
02 MAR 2025 4:39PM by PIB Chennai
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் (MEA) இணைந்து குளோபல் சவுத் தேசிய மனித உரிமை நிறுவனங்களின் (NHRIs) மூத்த நிலை செயல்பாட்டாளர்களுக்கு மனித உரிமைகள் குறித்த ஆறு நாள் இந்திய தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) நிர்வாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிகழ்ச்சியை புதுதில்லியில் 2025 மார்ச் 3 முதல் 8-ம் தேதி வரை ஏற்பாடு செய்துள்ளது. குளோபல் சவுத் எனப்படும் தென்பகுதி நாடுகளில் 14 நாடுகளில் இருந்து 47 பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மடகாஸ்கர், உகாண்டா, சமோவா, திமோர் லெஸ்டே, டி.ஆர் காங்கோ, டோகோ, மாலி, நைஜீரியா, எகிப்து, தான்சானியா, மொரீஷியஸ், புருண்டி, துர்க்மெனிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகள் இதில் அடங்கும். இந்த நிகழ்ச்சியை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் 03 மார்ச் 2025 திங்கட்கிழமை அன்று தொடங்கி வைக்கிறார்.
மனித உரிமைகளின் பல்வேறு பரிமாணங்கள், சர்வதேச கண்ணோட்டங்கள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதும், கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும், பங்கேற்பாளர்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
***
PLM/KV
(Release ID: 2107566)
Visitor Counter : 34