நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மத்திய சேமிப்புக் கிடங்கு கழகத்தின் 69-வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது - மத்திய அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி பங்கேற்பு
Posted On:
02 MAR 2025 4:28PM by PIB Chennai
உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மத்திய அரசு கவனம் செலுத்துவதால், கிடங்கு, சரக்குப் போக்குவரத்துத் துறை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அம்சமாக உள்ளது என மத்திய உணவுத் துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி கூறியுள்ளார். தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கை, பிரதமரின் விரைவு சக்திப் பெருந்திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம் சரக்கு போக்குவரத்து செலவுகளை குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய சேமிப்புக் கிடங்கு கழகத்தின் 69-வது நிறுவன தினத்தையொட்டி புதுதில்லியில் இன்று (02.03.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி இதனைத் தெரிவித்தார்.
1957-ம் ஆண்டில் இது தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவின் விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பில் அதன் முக்கிய பங்கை அங்கீகரித்த அவர், டிஜிட்டல் முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் செயல்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் நிறுவனத்தின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
இது 700 க்கும் மேற்பட்ட கிடங்குகளின் விரிவான கட்டமைப்பு, 148.29 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்பு செயல்பாட்டு திறன் கொண்டது என அவர் குறிப்பிட்டார். சேமிப்புக் கிடங்கு துறையில் இந்தியாவின் வரலாற்றுப் பாரம்பரியத்தையும் அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி குறிப்பிட்டார்.
***
PLM/KV
(Release ID: 2107564)
Visitor Counter : 38