ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தில்லி ஹாட்டில் மக்கள் மருந்தக மைய மாதிரியை மக்கள் மருந்தகத் துறை செயலர் தொடங்கி வைத்தார்
Posted On:
01 MAR 2025 7:35PM by PIB Chennai
பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டம் ( பி.எம்.பி.ஜே.பி)பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மக்கள் மருந்தக மையத்தின் மாதிரியை இந்திய அரசின் மருந்துப் பொருட்கள் துறை செயலாளர் திரு அமித் அகர்வால் புதுதில்லியில் உள்ள தில்லி ஹாட்டில் தொடங்கி வைத்தார்.
இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி திரு. ரவி தாதீச் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மக்கள் மருந்தக மையங்கள் மூலம் மலிவு விலையில் விற்கப்படும் உயர்தர மருந்துகள் குறித்து தில்லி ஹாட்டுக்கு வருகை தரும் மக்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சியால், இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுவான மருந்துகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7 ஆம் தேதி "மக்கள் மருந்தக தினமாக" கொண்டாடப்படுகிறது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, 2025 மார்ச் 1 முதல் 7 வரை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஒரு வார கால நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
31.01.2025 நிலவரப்படி, நாடு முழுவதும் 15,000 மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பி.எம்.பி.ஜே.பி.யின் தயாரிப்புகளில் 2047 மருந்துகள் மற்றும் 300 அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளன, அவை சில்லறை விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படும் பிராண்டட் மருந்துகளை விட 50% முதல் 80% வரை மலிவாக விற்கப்படுகின்றன.
பி.எம்.பி.ஜே.பி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 2027 மார்ச் 31-க்குள் 25,000 மக்கள் மருந்தக மையங்களைத் திறக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2025 மார்ச் மாதத்திற்குள் 15,000 மையங்களைத் திறக்க வேண்டும் என்ற இலக்கு 31.01.2025 அன்றே எட்டப்பட்டுவிட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107381
***********
BR/KV
(Release ID: 2107491)
Visitor Counter : 24