ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எம்.ஐ.டி பேராசிரியர் ஜொனாதன் பிளெமிங்,பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்திய அரசின் முயற்சிகள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் 

Posted On: 01 MAR 2025 7:41PM by PIB Chennai

அமெரிக்காவின் எம்.ஐ.டி ஸ்லோன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் ஜொனாதன் பிளெமிங், பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்திய அரசின் முயற்சிகள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பாராட்டியுள்ளார். புதுதில்லியில் உள்ள ஐ.சி.ஏ.ஆர் பூசா வளாகத்தில் நமோ ட்ரோன் சகோதரிகளுடன் கலந்துரையாடிய பிரதமர், பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காக தொழில்நுட்பத்தை இந்தியா எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைக் கண்டு தாம் உற்சாகமாக இருப்பதாகவும், இத்தகைய முயற்சி இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு மட்டுமின்றி, மற்ற நாடுகளில் உள்ள பெண்களுக்கும் உத்வேகம் அளிப்பதாகவும் கூறினார். பேராசிரியர் பிளெமிங், இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பெண்களுக்குக் கிடைக்கும் பயிற்சி மற்றும் நன்மைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார். 

ட்ரோன் சகோதரி திட்டத்தின் பயனாளிகள், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்திய அரசு எடுக்கும் முயற்சிகள் பற்றியும், நிதி உதவி வழங்குவது குறித்தும் பேராசிரியரிடம் விளக்கினர். ட்ரோனைப் பயன்படுத்துவது எவ்வாறு அடர்த்தியான பயிர்களில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க உதவுகிறது என்று  அவர்கள் விளக்கம் அளித்தார்கள். ட்ரோன்  சகோதரிகள் என்று அழைக்கப்படுவதில் தாங்கள் பெருமைப்படுவதாகவும், அவர்களின் நிதி நிலை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும்  பயனாளிகள் தெரிவித்தனர். பிரதமர்  திரு நரேந்திர மோடி ஒரு சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்றும், அவர் அவர்களுக்காக ஒரு சிறந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார் என்றும்  அவர்கள் குறிப்பிட்டனர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ஜொனாதன் பிளெமிங், அமெரிக்காவில் ட்ரோன் ஊக்கத் திட்டத்தின் 100 சதவீத பயனாளிகள் ஆண்கள் என்றும், ஆனால் இந்தியாவில் இது முற்றிலும்  வேறுபட்டிருக்கிறது  என்றும் கூறினார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க இந்தியா தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு  என்றார் அவர். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107388 

************ 

BR/KV


(Release ID: 2107489) Visitor Counter : 22


Read this release in: English , Urdu , Marathi , Hindi