திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்வவலாம்பினி என்ற மகளிர் தொழில்முனைவோர் திட்டம் - மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தொடங்கி வைத்தார்

Posted On: 01 MAR 2025 6:09PM by PIB Chennai

 

திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம், நித்தி ஆயோக்குடன் இணைந்து மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் ஸ்வவலாம்பினி (Swavalambini) என்ற மகளிர் தொழில்முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சி உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவிகளுக்குத் தொழில்முனைவோர் மனநிலை, வளங்கள், வழிகாட்டுதலை வெற்றிகரமாக வழங்கும்.

திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி இதனைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில், ஸ்வவலாம்பினி மகளிர் தொழில்முனைவோர் திட்டம் என்பது இளம் பெண்கள் சொந்த தொழில்களை நிறுவுவதற்குத் தேவையான திறன்களையும் நம்பிக்கையையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும் என்றார். திட்டங்களின் பயனாளிகளாக பெண்களை சேர்க்கும் திட்டங்களைத் தாண்டி, பெண்கள் தலைமையிலான மேம்பாட்டு முன்முயற்சிகளுக்கு  செல்ல அரசு விரும்புவதாக அவர் கூறினார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்தாக்கம் எனவும். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தொழில்முனைவோர், சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் (NIESBUD), இந்திய அறக்கட்டளையான திறன் மேம்பாட்டு நெட்வொர்க் (SDN) உடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்துதல், பாடத்திட்டங்களை மேம்படுத்துதல் பயிற்சிகள், போன்றவை இதன் நோக்கமாகும்.

மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு ஸ்ரீஷைல் மால்கே, மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருமதி சங்கீதா சுக்லா, திறன் மேம்பாட்டெ அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

PLM/KV

 

 


(Release ID: 2107403) Visitor Counter : 38


Read this release in: English , Urdu , Hindi