மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

சி-டாக்-கின் ஹிமாஷீல்ட்- 2024 சவால் திருவனந்தபுரத்தில் தேசிய அறிவியல் தினத்தன்று நிறைவடைந்தது

Posted On: 01 MAR 2025 5:05PM by PIB Chennai

 

மின்னணு, தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி முயற்சிகளின் கீழ் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையமான சி-டாக் திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்த ஹிமாஷீல்ட் (HIMASHIELD)- 2024 சவால், திருவனந்தபுரத்தில் தேசிய அறிவியல் தினத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத் (GLOF) தணிப்பில் புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த சவால் இளம் ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்களுக்கு, நிலையான தீர்வுகளை உருவாக்க ஒரு தளத்தை வழங்கியது.

இந்த நாடு தழுவிய மாபெரும் சவால் 2024 ஆகஸ்ட் 24 அன்று தொடங்கியது. போட்டியின் முதல் சுற்றில் 151 அணிகள் பங்கேற்றன. 30 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. மொத்தம் ஏழு அணிகள் இறுதிச் சுற்றில் பங்கேற்றன.

வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:

வெற்றியாளர் (ரூ.5 லட்சம், கோப்பை மற்றும் சான்றிதழ்கள்): சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆர், நவீன் கிருஷ்ணா எஸ், நிதிஷ் டி ஆகியோர் குளோஃப்சென்ஸ் டீமில் இடம்பெற்றுள்ளனர்.

ஹிமாஷீல்ட்- 2024 என்பது தொலைநோக்கு சிந்தனையாளர்களுக்கு பருவநிலை மாற்ற சவால்களைத் தாண்டி, பாதுகாப்பான, நிலையான எதிர்காலத்திற்கு பங்களிப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்கும் போட்டியாகும்.

***

PLM/KV

 


(Release ID: 2107377) Visitor Counter : 29


Read this release in: English , Urdu , Hindi