பாதுகாப்பு அமைச்சகம்
உடான் திட்டத்தில் சிவில் விமான -ராணுவ விமான ஒத்துழைப்பை விமானப்படை மேம்படுத்துகிறது
Posted On:
01 MAR 2025 5:35PM by PIB Chennai
பிராந்திய இணைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது விமானமான போயிங்-737 விமானத்தை கொல்கத்தா-ஹிண்டன் - கோவா வழித்தடத்தில் இன்று (01 மார்ச் 2025) அன்று அறிமுகப்படுத்தியது. ஹிண்டனில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடுவால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம், முன்மாதிரியான சிவிலியன் விமான, ராணுவ விமான போக்கிவரத்து ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தியது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஹிண்டன் விமான நிலையம் உள்ளது. அதன் உத்திசார் அமைவிடம், இரட்டை பயன்பாட்டு திறன்கள், ராணுவ உள்கட்டமைப்பு, பல்வேறு விமான போக்குவரத்தை கையாளும் திறன் காரணமாக ஆகியவை இது தேசத்திற்கு ஒரு முக்கியமான இடமாகும். ஹிண்டனில் இருந்து விமானங்களை அறிமுகப்படுத்துவது தில்லி தேசிய தலைநகர் பகுதியில் விமான போக்குவரத்தை குறைக்கும்.
உடான் திட்டத்தின் கீழ் இந்த விமானம் ராணுவ, சிவிலியன் விமான நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கான இந்திய விமானப்படையின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும், இது பல்வேறு இடங்களுக்கு மேம்பட்ட அணுகலை எளிதாக்குகிறது.
நாட்டின் வானத்தைப் பாதுகாப்பதற்கான அதன் முக்கிய நோக்கத்திற்கு அப்பால், இந்தியா முழுவதும் பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உடான் திட்டம் போன்ற முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம் விமானப்படை தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக பங்களிக்கிறது.
***
PLM/KV
(Release ID: 2107353)
Visitor Counter : 34