நித்தி ஆயோக்
பெண் தொழில்முனைவோருக்கான பிளாட்ஃபார்ம் - நிதி ஆயோக் இணைந்து நடத்திய தொழில்முனைவு மூலம் பெண்கள் முன்னெடுக்கும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்த மாநில அளவிலான பயிலரங்கம்
Posted On:
28 FEB 2025 4:52PM by PIB Chennai
மிசோரம் மாநில அரசு, தொழில் முனைவோருக்கான பிளாட்ஃபார்ம் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நிதி ஆயோக் பெண்கள் முன்னெடுக்கும் வளர்ச்சியை செயல்படுத்துவது குறித்த மூன்றாவது மாநில அளவிலான பயிலரங்கை நேற்று மிசோரமில் நடத்தியது. ஐஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப் பயிலரங்கில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இந்த மண்டலத்தைச்சேர்ந்த மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிலரங்கின் முதலாவது அமர்வில் சிறப்பு விருந்தினராக மிசோரம் மாநில முதலமைச்சர் திரு லால்துஹோமா கலந்து கொண்டார். அவர் தனது உரையில், மிசோரம் மாநிலத்தில் உள்ள பெண் தொழில்முனைவோர்கள் குறிப்பிடத்தக்க திறனையும், நெகிழ்வுத் திறனையும் கொண்டுள்ளதாகக் கூறினார். இருப்பினும் முதலீடு, சந்தை வாய்ப்புகள் போன்ற சவால்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மிசோரமில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் பயனாளிகள் தனிநபர்களாக இருப்பது மட்டுமல்லாமல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பவர்களாகவும் உள்ளனர். பொருளாதார, சமூக மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கில் மாநில அரசு அவர்களுக்குத் துணை நிற்பதாக அவர் தெரிவித்தார். திட்டத்தின் பயனாளர்கள் உலக உற்பத்திக் கொள்கை தளத்தில் (www.wep.gov.in) பதிவு செய்து, தொடங்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களின் பலன்களையும் பெறுமாறு அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106956
-----
TS/SV/KPG/DL
(Release ID: 2107034)
Visitor Counter : 58