குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சிலர் அறியாமையால் ஆன்மிகத்தை மூடநம்பிக்கை என்கின்றனர்: குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

प्रविष्टि तिथि: 28 FEB 2025 5:24PM by PIB Chennai

அறியாமையின் காரணமாக சிலர் நமது புனிதமான ஆன்மிகத்தை மூடநம்பிக்கை என்று முத்திரை குத்துகின்றனர் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்திற்குச் சென்ற அவர், கௌடியா மிஷனின் நிறுவனர் ஆச்சார்யா ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதின் 150 வது பிறந்தநாள் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். சனாதனம் என்பது உள்ளடக்கிய தன்மையைக் குறிக்கிறது என்று அவர் அங்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

சனாதனம் உலகளாவிய நன்மையைக் குறிக்கிறது என்றும் அதில் அடிமைத்தனம் இல்லை என்றும் தெரிவித்தார். மதத்தை ஒரு குறுகிய பழமைவாத முறையில் பார்க்க முடியாது என்று கூறிய அவர்மதத்தின் உண்மையான அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

நமது கலாச்சாரத்தின் மீது படையெடுப்புகள் நடந்த போதும் அவை நிலைத்து நிற்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அறிவாற்றல் ஒட்டுமொத்த உலகிற்கானது என்று கூறிய அவர், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் நமது பழங்கால அறிவுக்கும் தொடர்பு உள்ளது என்று தெரிவித்தார்.

கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும், சமூகத்தின் கலாச்சார அம்சங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தினார்.

மேற்குவங்க ஆளுநர் திரு ஆனந்த போஸ், மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி, கௌடியா மிஷன் தலைவர் மற்றும் ஆச்சார்யா தலைவர் ஸ்ரீமத் பக்தி சுந்தர் சன்யாசி கோஸ்வாமி மகாராஜ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106991

***

TS/PLM/RJ/DL


(रिलीज़ आईडी: 2107030) आगंतुक पटल : 34
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam