பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆண்டுக்கு இருமுறை வெளிவரும் இந்தி பத்திரிகையான 'சஷக்த் பாரத்'-ன் முதல் பதிப்பை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டார்
Posted On:
27 FEB 2025 2:31PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் இந்தி பத்திரிகையான 'சஷக்த் பாரத்' -ன் முதல் பதிப்பை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (2025 பிப்ரவரி 27) புதுதில்லியில் உள்ள சவுத் பிளாக்கில் வெளியிட்டார். இந்தப் பத்திரிகையில் ஆயுதப்படை வீரர்களின் வீரம், தேசபக்தி மற்றும் தியாகங்கள் பற்றிய கவிதைகளும், அமைச்சகத்தின் பணியாளர்களால் எழுதப்பட்ட அரசின் கொள்கைகள் குறித்த விளக்கக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறைப் பிரிவு
இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக எடுத்துள்ள முயற்சிகளை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். இந்தியாவின் சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்பை இணைக்கும் இழையாக மொழி விளங்குவதால், இந்தி மொழியை ஏற்றுக்கொண்டு அதன் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106587
***
TS/IR/AG/KR
(Release ID: 2106607)
Visitor Counter : 19