பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியினக் கைவினைஞர்களின் திறனை மேம்படுத்தவும், அவர்களின் வர்த்தகத்தை எளிதாக்கவும் ரூஃப்டாப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு கையெழுத்திட்டுள்ளது
प्रविष्टि तिथि:
25 FEB 2025 4:06PM by PIB Chennai
இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பானது (டிரைஃபெட்) பழங்குடியினரின் வணிகங்களை எளிதாக்குவதற்காக ரூஃப்டாப் நிறுவனத்துடன் கூட்டாண்மையில் இணைந்துள்ளது. இதை முன்னெடுத்துச் செல்வதற்காக, புதுதில்லியில் பிப்ரவரி 24 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது வர்த்தகர்களுக்கு இடையேயான அணுகுமுறையை அமல்படுத்துவதற்கும், பழங்குடியினர் உற்பத்திப் பொருள் சந்தையை விரிவுபடுத்துவதற்கும் முக்கிய நடவடிக்கையாகும்.
2025 பிப்ரவரி 16 முதல் 24 வரை தேசிய தலைநகரில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற 'ஆதி பெருவிழா'(பழங்குடியினர் திருவிழா) நிகழ்ச்சியின் போது டிரைஃபெட் நிர்வாக இயக்குநர் திரு ஆஷிஷ் சாட்டர்ஜி முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. டிரைஃபெட் துணைப் பொது மேலாளர் திருமதி ப்ரீத்தி டோலியா மற்றும் ரூஃப்டாப் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு கார்த்திக் காகர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு பரிமாறப்பட்டது. பழங்குடியினக் கைவினைஞர்களின் திறனை மேம்படுத்த உதவுவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106114
***
TS/IR/AG/DL
(रिलीज़ आईडी: 2106232)
आगंतुक पटल : 54