ஜல்சக்தி அமைச்சகம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாடு மற்றும் மேலாண்மை குறித்த ஐந்து நாள் பயிற்சி திட்டம்
Posted On:
25 FEB 2025 11:17AM by PIB Chennai
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் சுகாதார நிறுவனமானது மத்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, அந்தமான் பொதுப்பணித் துறையுடன் இணைந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்களுக்கு 2025 பிப்ரவரி 24 முதல் 28 வரை கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாடு மற்றும் மேலாண்மை குறித்த ஐந்து நாள் உள்ளுறை பயிற்சித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
மோசமான செயல்பாடு மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் காரணமாக உருவாகும் சவால்களை அங்கீகரித்து அவற்றை சமாளிக்கவும் கணினி திறமையின்மை, வருவாய் அல்லாத நீர்வளம், எரிசக்தி நுகர்வு மற்றும் போதிய சமூக ஈடுபாடு இல்லாமை போன்ற முக்கியமான சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கு தேவையான திறன்கள் மற்றும் அறிவுடன் பொறியாளர்களை தயார்படுத்துவதில் இந்தப் பயிற்சித் திட்டம் கவனம் செலுத்துகிறது.
இந்தப் பயிற்சி மற்ற அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கட்டம் கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைமைச் செயலரும், இந்திய ஆட்சிப்பணியாளருமான திரு சந்திர பூஷண் குமார், தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய தலைமைச் செயலாளர், குடிநீர் வழங்கல் திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்ய களப் பொறியாளர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். விநியோக மேலாண்மையில் நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
அந்தமான் & நிக்கோபார் நிர்வாகத்தின் இளநிலை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் நீர் வழங்கல் திட்டங்களை திறம்பட நிர்வகிப்பதில் அவர்களின் செயல்பாட்டு மற்றும் நிர்வாக திறன்களை மேம்படுத்துவதே இந்த பயிற்சி திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105997
***
TS/IR/AG/KR
(Release ID: 2106109)
Visitor Counter : 21